
Cast :Magesh, Anjali
Direction :Vasantha Balan
Production :K.Karuna moorthi,C.Arun Pandiyan
Music :GV Prakash Kumar, Vijay Antony.
தாங்க முடியாத வலிகளை தன் குடும்பமுன்னேற்றத்திற்காக வசந்தங்களாக ஏற்றுகொண்டு இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்,நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சில மனிதர்களின் இயல்பானவாழ்க்கையை சிறிதும் பிழை இல்லாமல்அப்படியே சொல்லியிருக்கும் அற்புதமானபடம்.இல்லை இல்லை வரலாறு.
நெடுநாள் கழித்து தமிழ் சினிமாவில்வெளிவந்துள்ள மிக சிறந்த அற்புதமான காதல்கவிதை.தமிழ் சினிமா அவ்வப்போது உயிர்பெறுகிறதென்றால் அது இப்படிப்பட்ட படங்கள்மூலம் தான் என்று சொன்னால் மிகைஆகாது.
பள்ளியிலேயே முதல் மாணவனாக வரும் லிங்கு ( மகேஷ்) தன் தந்தையின் அகால மரணத்தின் மூலம் மேற்கொண்டு படிக்க முடியாமல் குடும்ப பாரத்தை தோள் மேல் சுமந்து கொண்டு சென்னை தீ.நகரில் உள்ள மிக பிரபலமான ஒரு ரெடிமேட் ஷோரூமிற்கு வேலைக்கு வருகிறான்.ஏற்கனவே அங்கு வேலைபார்க்கும்
கனியுடன் (அஞ்சலி) அடிக்கடி சின்ன சின்ன சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான்.இந்த சண்டை நாளடைவில் காதலாக மலர்கிறது.இந்த காதலை வேரோடு அறுக்க சில கருங்காலிகள் கையில் ஆயுதங்களுடன் அலைகிறார்கள்.இவர்கள் எண்ணம் நிறைவேறியத காதலர்கள் இணைந்தார்களா,பிரிந்தார்கள என்பதை அழுத்தமாகவும்,ஆணித்தனமாகவும்,அற்புதமாகவும்,அழகாகவும் பதிவுசெய்திருக்கிறார் வசந்தபாலன்.
படம் பார்க்காதவர்கள் தேட்டர் சென்று பாருங்கள்.பார்த்தவர்கள் மீண்டும் மீண்டும் சென்றுபாருங்கள்.
குடும்ப வறுமையினாலும்,சூழ்நிலையாலும் கிராமத்திலிருந்து ரெடிமேட் ஷோரூமுக்கு வேலைக்கு வரும் இளைஞர்களும்.இளம் பெண்களும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த வேலை செய்கிறார்கள்.இந்த வேலைக்காக எதையெல்லாம் தாங்கிக்கொள்கிறார்கள் என்பதை யாருக்கும் பயப்படாமல் ஆணியடித்து சொல்லியிருக்கிறார் இயக்குனர். படம் துவக்க காட்சியில் வரும் விடுதியும்,சாப்பிடும் இடமும்,அவர்கள் குளிக்கும் இடத்தையும் பார்க்கும் போது நமக்கே ஒரு அருவருப்பபையும்,கண்களில் கண்ணீரையும் வரவழைத்து விடுகிறது.இது எல்லாம் உண்மைதானா என்று நாமே நம்மை கேட்டுகொள்ளாவும் செய்கிறது.என்னடா இது ஒரு அழுகாச்சி நிறைந்த ஒரு சோகமான படமோ என்று நினைக்க தோன்றிய சில நிமிடங்களிலேயே,இவை எல்லாவற்றையும் மீறி இறுதியாக நம்மை அந்த க(டை)தைக்குள் பின்னிபினைய வைத்திருப்பது திரைக்கதையின் பலம்.
சரி நான் படத்தை பற்றியும் அதற்க்கு உயிர் தந்தவர்களை பற்றியும் கொஞ்சம் சொல்ல ஆசை படுகிறேன்.முதலில் இந்த வரலாற்றை உருவாக்கிய காவியத் தலைவன் பற்றி.
வசந்தபாலன்:

தயாரிப்பாளர்கள் :

இவர்கள் இல்லையென்றால் இப்படி ஒரு படம் நிச்சயம் வந்திருக்காது.உங்கள்ளுக்கு மிக்க மிக்க என் சிரம் தாழ்ந்த நன்றிகளும்,வாழ்த்துக்களும்.அருண் பாண்டியன் சார்,கருணாமூர்த்தி சார்,எங்கள் நண்பன் ஒருவன் இருக்கிறான்.அங்காடித் தெரு போன்ற அற்புதமான கதைகளை வைத்திருக்கிறான்.நீங்கள் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் நிச்சயம் சாதிப்பான்.அவனுக்கு ஒரு வெளிச்சம் காட்டுங்கள்,அவன் பல புதிய பாதைகளை காட்டுவான்.
அஞ்சலி :

மகேஷ்:

விஜய் அந்தோனி & G.V.பிரகாஷ்:

ரிச்சர்ட்:
இவரின் போட்டோ கிடைக்கவில்லை மன்னிக்கவும்.ரங்கநாதன் தெருவில் நடப்பதே மிகவும் கடினம்.இதில் கேமராவை வைத்து விளையாடி இருக்கிறார் ரிச்சர்ட்.வாழ்த்துக்கள் சார்.உங்களுக்கும் பல விருதுகள் காத்திருக்கிறது.ரங்கநாதன் தெருவை இவ்வளவு அழகாக காண்பித்து ஆச்சர்ய படவைகுறீர்கள்.அங்காடித்தெரு உங்களால் தான் இவளவு அழகாக இருக்கிறது.ஆனால் இதை தர நீங்கள் என்ன கஷ்ட்ட பட்டிருப்பீர்கள் என்று நன்றாகவே தெரிகிறது.
முத்துக்குமார் & ஜெயமோகன்:
இவர்கள் இருவரை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.முத்துக்குமாரின் பாடல் வரிகள் அற்புதமாய் ஆழமாய் இருகின்றன.பாடலின் ஒவ்வொரு வரிகளிலும் அழுத்தமான வார்த்தைகள் இருப்பது அந்த பாடல்களுக்கே உள்ள அழகு.மீண்டும் நிரூபித்திருக்கிறார் முத்துக்குமார்.வாழ்த்துக்கள் சார்.ஜெயமோகன் சமீபகாலமாக அழுத்தமாகவும் ஆழமாகவும் அழகாகவும் வசனங்கள் எழுதி வலம் வருகிறார்.அனைத்து வசனங்களும் ஆணிதனமானவை.குறிப்பாக குளியலறையின் அருகில் கனியிடம் லிங்கு பேசும் வசனம்.கனி சோபியிடம் ''இவன் ஒருவநிடமாவது மான,ரோஷத்துடன் இருக்கிறேனே என்று சொல்லும் வசனம்.குள்ள மனிதரின் மனைவி குழந்தை பெற்று வரும் போது பேசும் வசனம்.விக்குறவன் தான் இங்க ஜெயிப்பான் இப்படி பல வசனங்கள் திரையரங்கை கைதட்டல்களால் அதிரவைக்கும் வசனங்கள்.உங்களுக்கும் பல விருதுகள் காத்திருக்கிறது வாழ்த்துக்கள்சார்.
A. வெங்கடேஷ் :
இப்படி ஒரு வில்லனை தமிழ் சினிமா இவ்வளவு நாள் எப்படி விட்டு வைத்தது என்று தெரியவில்லை.கண்களாலேயே மிரட்டுகிறார்.அவர்கள் மிரல்கிறார்களோ இல்லையோ நாம் நன்றாகவே மிரல்கிறோம்.சார் இந்த வருடத்தின் சிறந்த வில்லன் நீங்கள் தான்.திரையரங்குகளில் உங்களை மிகவும் கேவலமாக திட்டுகிறார்கள்.அது தான் உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.வாழ்த்துக்கள்சார்.
பாண்டி:
இவரை வசந்தபாலன் தான் முழுமையாக உபயோகப்படுத்தியிருக்கிறார்.நல்ல நகைசுவையாளர்.நல்ல குணசித்திர நடிகர்.படம் இன்னும் அழகாக செல்ல இவருடைய பங்களிப்பும் மிகவும் முக்கியமான ஒன்று.உங்களுக்கும் மிகப்பெரிய எதிர்காலம் நிச்சயமாய் உண்டு சார்.வாழ்த்துக்கள்.இவருக்கு ஜோடியாக வரும் சோபியும் நன்றாக நடித்திருக்கிறார்.இவர் இந்த படத்திற்காக தன் இடுப்பு வரை இருந்த அழகான கூதலையே வெட்டி இருக்கிறார் என்றால் பாருங்களேன்.லிங்குவின் தங்கையாக வரும் குட்டி அந்த பையை வாங்கும் காட்சியில் அதகளபடுதியிருக்கிறார்.கனியின் தங்கையாக வரும் நாகுவின் நடிப்பும்யதார்த்தம்.
இவர்கள் மட்டுமல்ல செல்லவராணி,சௌந்தரபாண்டி,பழகருப்பையா,குள்ள மனிதர்,அவரின் மனைவி,கண் தெரியாத முதியவர்,குப்பை பொறுக்கும் முதியவர்,பிச்சையெடுக்காமல், கழிப்பறையை சுத்தம் செய்து உழைத்து நல்லநிலமைக்கு வரும் மனிதர் இப்படி இன்னும் பலர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகவும்,அழகாகவும்,அற்புதமாகவும்,பயன்படுத்தி நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறார்கள்.
என்னை பொறுத்தவரையில் ஒரு நல்ல ரசிகனாக இந்த படத்தில் ஒரு சிறுய குறையும் இல்லை என்று நான் சொல்வேன்.கடந்த 5 வருடங்களில் இது போன்ற படம் வந்ததில்லை
கடந்த 10 வருடங்களில் மிகச்சிறந்த கிளைமாக்ஸ் இதுதான்.இந்த படம் இந்த வருடத்தின் சிறந்த படம்,சிறந்த இயக்குனர்,சிறந்த கதாநாயகி,கதாநாயகன்,வசனகர்த்தா,பாடலாசிரியர்,இசையமைப்பாளர்,கேமராமேன்,நகைச்சுவையாளர்,சிறந்த கதை என அனைத்து பிரிவுகளிலும் விருது வாங்குவதுநிச்சயம்.
நான் படத்தை முதலில் பாரத் என்ற திரை அரங்கில் தான் பார்த்தேன்.கிளைமாக்ஸ் காட்சியில் ஒட்டுமொத்த திரை அரங்கும் எழுந்து நின்று கைதட்டியது.இதுவரை நான் இப்படி மக்கள் செய்துபார்க்கவில்லை.
ஒரு முக்கியமான சம்பவத்தை சொல்ல மறந்து விட்டேன்.படம் வெளியான போது சென்னையில் பல திரை அரங்குகளில் படத்தை வாங்கவில்லை.படம் வெளிவந்து 2 நாட்களுக்கு பிறகே அனைத்து திரையரங்குகளும் போட்டி போட்டுக்கொண்டு வாங்க தொடங்கினர்.அது மட்டுமில்லை நான் சாந்தி தேட்டர் அருகில் தான் வேலை செய்கிறேன் அங்கு அங்காடித் தெருவுக்கு மிகச்சிறிய அளவே பேனர் வைத்திருந்தார்கள்,அது கூட தலைமைச்யலகத்தை பார்த்த மாதிரி.அங்கு அசல் படத்திற்கு மிகப்பெரிய பேனர்கள் வைத்திருந்தார்கள்.எனக்கு கோவம் தான் வந்தது.ஆனால் சரியாக 2 நாட்கள் கழித்து அசல் பேனரை எடுத்து விட்டு அதே இடத்தில மிகப்பெரிய பேனர் வைத்தார்கள்.மிகவும் சந்தோஷப்பட்டேன்.படம் பேசபடதொடங்கிவிட்டது என்று.இப்போது படம் சாதாரண நாட்களிலேயே House புல் காட்சிகளாக போய்கொண்டிருக்கிறது.மிகவும் மகிழ்சியாயிருக்கிரேன். நம் தமிழ் மக்கள் எப்பொழுதும் நல்ல படங்களை கைவிடுவதில்லை.தலை மீது வைத்து கொண்டாடுவார்கள்.
மொத்தத்தில் இந்த அங்காடித் தெரு அழகான,அற்புதமான,ஆர்ப்பாட்டமில்லாத பல உண்மையான சம்பவங்களையும்,திருப்பங்களையும் கொண்ட திறமையான ஒரு படைப்பாளியால் கண்டெடுக்கப்பட்ட வரலாற்று தெரு.
அங்காடித் தெரு அற்புதமான படைப்பு.