

நம் பள்ளி மைதானம் எல்லாம் செம்மன்னாக கிடக்கிறதே,
உண்மையை சொல்,
தோழிகள் கிண்டலில் நீ அடிக்கடி வெட்கப்படும் இடம்
அது தானே!...
உண்மையை சொல்,
தோழிகள் கிண்டலில் நீ அடிக்கடி வெட்கப்படும் இடம்
அது தானே!...
எனக்கு தெரியும்
நீ முத்தமிட்டு சிவப்பாக்கிய
சாக்பீசை தான்
உதட்டு சாயம் என்று
உலகம் சொல்கிறது...
உன் மனப்பாட பகுதி
திருக்குறளாக இருக்கலாம் ...
ஆனால்
என் மனப்பாட பகுதி நீதான் !...