

நம் பள்ளி மைதானம் எல்லாம் செம்மன்னாக கிடக்கிறதே,
உண்மையை சொல்,
தோழிகள் கிண்டலில் நீ அடிக்கடி வெட்கப்படும் இடம்
அது தானே!...
உண்மையை சொல்,
தோழிகள் கிண்டலில் நீ அடிக்கடி வெட்கப்படும் இடம்
அது தானே!...
எனக்கு தெரியும்
நீ முத்தமிட்டு சிவப்பாக்கிய
சாக்பீசை தான்
உதட்டு சாயம் என்று
உலகம் சொல்கிறது...
உன் மனப்பாட பகுதி
திருக்குறளாக இருக்கலாம் ...
ஆனால்
என் மனப்பாட பகுதி நீதான் !...
7 comments:
ஹேய்.. மச்சி எப்படிடா இதெல்லாம்???
செமையா இருக்கு..
// எனக்கு தெரியும்
நீ முத்தமிட்டு சிவப்பாக்கிய
சாக்பீசை தான்
உதட்டு சாயம் என்று
உலகம் சொல்கிறது //
சூப்பர்டா மச்சி
ஹாய் பார்த்திபன்.. உங்க கவிதைகள் ரொம்ப நல்லா இருக்கு.. எனக்கு பிடிச்சு இருக்கு
நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா என்னோட சில Suggestions...
Mr.பார்த்திபன்.. பிளாக் ஆரம்பிக்கறது ஒரு சாதாரண விஷயம்தான். ஆனா அதை தொடர்ந்து எழுதணும். அதுதான் பெரிய விஷயம். I Hope You will going to rock...
உங்களுடைய எழுத்துக்கள்'ல இருக்கிற சில ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகளை கவனிச்சுக்குங்க.
****நம் பள்ளி மைதானம் எல்லாம் செம்மன்னாக கிடக்கிறதே***
அது செம்மன்னாக இல்லை.... செம்மண்ணாக...
அப்புறம் வேர்ட் வெரிபிகேஷனை எடுத்து விட்டுடுங்க. கமெண்ட் போடுறவங்களுக்கு ரொம்ப டிஸ்டர்ப்பா இருக்கும்.
ரொம்ப முக்கியமான விஷயம் உங்களுக்கு கமெண்ட் அனுப்புற வாசகர்களுக்கு நீங்க கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும். அது நெகட்டிவ் கமெண்ட்டா இருந்தாலும்...
எழுதுதல்'ங்கிறது ரொம்ப அழகான விஷயம். எல்லோருக்கும் அந்த ரசனை வந்திடாது. தொடர்ந்து எழுதுங்க பார்த்திபன். வாழ்த்துக்கள். ஆல் தி பெஸ்ட்....
தேங்க்ஸ் டா கவிதை காதலனே,
உன்னை பார்த்து தான் நான் பிளாக் ஆரம்பிச்சேன்.
நீ தான் என்னோட முதல் ரசிகன்.And also குரு.உன்னோட ஆதரவு என்னைக்கும் இருக்கும்னு நம்புறேன்.
என்னை பாராட்ட மட்டும் இல்ல என் கிறுக்கல்களில் தவறு இருந்தாலும் நிச்சயம் நீ சொல்லனும், ஏன்னா நீ என்னோட ரசிகன் மட்டும் இல்ல குருவும் தான்.
மிஸ் Nadhiya reply லேட்டா பண்றதுக்கு மன்னிச்சிகோங்க,என் job அப்படி.
உங்க comments கிடைக்கும்னு நான் கொஞ்சம் கூட நினைகல.
முதல்ல உங்களுக்கு ஒரு மிக பெரிய தேங்க்ஸ்.
நீங்க என் கவிதைகளுக்கு ரசிகையா கிடைச்சதுக்கு நான் ரொம்ப சந்தோஷ படுறேன்.ஆனா இதுக்கு காரணமே மணி தான்.அவன் தான் என்னோட குரு.
என் கவிதைகளை ரசிச்சிட்டு விட்டுடாம அதுல இருக்குற தவறுகளையும் சொல்லி திருத்திக்க வெச்சதுக்கு மிக்க நன்றி.உங்க ஆதரவு என்னைக்கும் இருக்கும்னு முழுசா நம்புறேன்.நீங்க சொன்ன தவறுகள் இனிமே நடக்காமல் பாத்துக்குறேன்.
தேங்க்ஸ்...
//என்னை கொன்றுவிட்டு போன அவளை நினைவுபடுத்திய வரிகள்.இன்றும் அவள் வாயில் இருந்து வந்த அந்த வரிகள்,அவள் அனுப்பிய MSG அத்தனையும் என்னை விட்டு பிரிய மறுக்கிறது.//
உங்கள் வலி எனக்கும் உண்டு
காயம் ஆற வாழ்த்துக்கள்.
//எனக்கு தெரியும்
நீ முத்தமிட்டு சிவப்பாக்கிய
சாக்பீசை தான்
உதட்டு சாயம் என்று
//
ஹய்யோ எப்படி அண்ணா இப்படி ? உண்மைலேயே ரொம்ப பிடிச்சிருக்கு ..
Post a Comment