Monday, August 15, 2011

சுதந்திரம் - அடைந்துவிட்டோமா?.


நண்பர்களே இதுவரை நான் தொடர்ந்து ப்ளாக் எழுதவில்லை.இதுவரை 4 பதிவுகளை மட்டுமே எழுதியிருக்கிறேன்.ஆனால் இனி தொடர்ந்து எழுதலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்.அதன் தொடக்கமாக இந்த புனிதமான நாளில் என் ஆதகங்த்தையும்,நம் தவறுகளையும் திருத்திக்கொள்ள என்னுடய சிறு Requestஐ உங்கள் முன் வைக்கிறேன்.

சுதந்திரம் பெற்று 65 வருடங்கள் ஆகிவிட்டது.மனதை தொட்டு சொல்லுங்கள் நாம் முழு சுதந்திர நாட்டில் தான் இருக்கிறோமா?எங்கு பார்த்தாலும் கொலை,கொள்ளை,கற்பழிப்பு,தீவிரவாதம்,மெகா ஊழல்கள்,வறுமை,பஞ்சம்,பசி,பட்டினி, இன்னும் எத்தனையோ விஷயங்கள் தலைவிரித்து தாண்டவமாடிக்கொண்டிருக்கின்றன.ஆனால் வருடா வருடம் தில்லியிலும் சரி,நம் தமிழகத்திலும் சரி தலைவர்கள் கொடியேற்றி அறிக்கை விட்டு விட்டு அடுத்த வேலைக்கு (பழிவாங்க,மக்கள் பணத்தை சுரண்ட) தயாராகிவிடுகின்றனர்.இது நாட்டின் முதல் குடிமகன் தொடங்கி கடைகோடி வரை நடக்கிறது.

ஓட்டு போடவில்லை என்றால் 6 மாதம் தண்டனை,
ஓட்டு போட்டால் 5 வருடம் தண்டனை.சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை.

உண்மையில் நாம் முழு சுதந்திரம் அடைந்து விட்டோமா?.நம் முன்னோர்கள் வெள்ளையனிடமிருந்து அடிபட்டு,உதைபட்டு,குண்டடி பட்டு தங்கள் விலைமதிக்க முடியாத இன்னுயிரை விட்டது இதற்க்கு தானா?.சுதந்திரம் தரப்பட்டதல்ல,அவர்கள் தியாகத்தால் பெறப்பட்டது.வெள்ளையனிடமே அடிமையாய் இருந்திருந்தாலும் நன்றாகதான் இருந்திருப்போமே என்று என்னதோன்றுகிறதல்லவா.அப்படி இருந்திருந்தால் நிச்சயம் இந்தியா இந்நேரம் வல்லரசாகியிருந்திருக்கும்.இளைஞர்கள் கையில் இந்தியாவாம்,ஆனால் இன்று நாம் தான் அழிவுப்பாதையில் wheeling செய்து கொண்டு மிக வேகமாக சென்றுகொண்டிருக்கிறோம்.பாவம் நம் இளைஞர்களின் Hero என்று அழைக்கப்படும் டாக்டர்.A.P.J.அப்துல் கலாம்,இந்தியா வல்லரசாகிவிடுமென்று கனவு கண்டுகொண்டிருக்கிறார்.எனக்கு பகத்சிங்கும்,சுபாஷ் சந்திரபோஸும் ரொம்ப பிடிக்கும்.

பகத்சிங் அவர் பார்வையில் சுதந்திரம் என்ன என்பதை ஒரு இடத்தில் சொல்லியிருப்பார்,அந்த வரிகள் இதோ,
பாலுக்காக அழும் குழந்தை,
கல்விகாக ஏங்கும் சிறுவன்,
வேலைகாக அலையும் இளைஞன்,
வறுமையில் வாடும் தாய்,
இவர்கள் இல்லாத இந்தியாவே
உண்மையான சுதந்திர இந்தியா...

இன்று நாம் என்ன நடந்தாலும்,அதை பற்றி கவலைபடாமல் தான் உண்டு,தன் வேலை உண்டு என்று அவரவர் வேலையில் மும்முரமாய் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.பக்கத்து வீட்டில் இருப்பவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பது,அந்த பிணத்தில் இருந்து வரும் துற்நாற்றத்தை வைத்தே தெரிந்துகொள்கிறோம் (இன்று பட்டிமன்றத்தில் ராஜா சொன்னது).இப்படி எது நடந்தாலும் அதை அடுத்த சில நாட்களிலேயே மறந்து விட்டு மறுபடியும் அவரவர் வேலையில் இறங்கிவிடுகிறோம்.இதை பற்றி நம் சுபாஷ் சந்திரபோஸ் அழகாக சொல்லி இருப்பார்.
உலகிலேயே மிகப்பெரிய குற்றம் அநீதிகளையும்,தவறுகளையும் சமரசம் செய்துகொள்வது.

இப்படி இவற்றை யாராவது ஒருவன் எங்காவது தட்டி கேட்டால் அவனை அன்னியன்,அம்மாஞ்சி,பைத்தியக்காரன் என்று சொல்லுகிறோம்.ஒரளவுக்கு மேல் போனால் அவனை தீவிரவாதி என்று பட்டம் கட்டி போட்டு தள்ளிவிடுகிறோம்.அதர்மம் தலை தூக்கும் போது கடவுள் நேராக வருவதில்லை இது போன்ற அன்னியங்களாகவும்,அம்மாஞ்சிகளாகவும்,பைத்தியக்காரர்களாகவும் தான் வருவார்.இதை உணர்வோம்.ஒவ்வொரு மனிதனும் ஒழுக்கத்துடன் நடந்துகொண்டாலே போதும் நல்லவை தானாகவே நடக்கும்.நாடும் செழிக்கும்.இது Advise அல்ல Request.

பெற்ற சுதந்திரத்தையும், பெறுவதற்க்கு பட்ட கஷ்டங்களையும் உணர்வோம், ஒழுக்கத்துடன் இருந்து உயர்வோம், நாடும் உயரும். ஜெய்ஹிந்த்...

10 comments:

விஷ்ணு said...

hmmm.............nice

ஸ்வீட் ராஸ்கல் said...

மிக்க நன்றி மச்சி...

ஆர்வா said...

அற்புதமான சுதந்திர தின நாளில் சிந்திக்க வைக்கும் பதிவு.. இனிமேல் அடிக்கடி எழுதுவேன் என்று சொல்லி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது... வாழ்த்துக்கள் மச்சி. தொடர்ந்து எழுது.. ஆல் தி பெஸ்ட்...

ஸ்வீட் ராஸ்கல் said...

மிக்க நன்றி மச்சி.நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன்.இதோ அடுத்த பதிவும் ரெடி.

shobijai said...

hmmm yup good 1...paraveillayey unnaku kuda thesam patru iruku....

ஸ்வீட் ராஸ்கல் said...

//hmmm yup good 1...paraveillayey unnaku kuda thesam patru iruku....//

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஷோபி.தொடர்ந்து வாருங்கள்...

பிரதாப் said...

i love machi super da....

ஸ்வீட் ராஸ்கல் said...

மிக்க நன்றி மச்சி கருத்தை பகிர்ந்து கொண்டதற்க்கு.

அம்பாளடியாள் said...

நெஞ்சைக் கனக்க வைக்கும் புகைப்படம் .

பெற்ற சுதந்திரத்தையும், பெறுவதற்க்கு பட்டகஷ்டங்களையும் உணர்வோம், ஒழுக்கத்துடன் இருந்துஉயர்வோம், நாடும் உயரும். ஜெய்ஹிந்த்...
இறுதியில் அருமையான வாசகம் .மொத்தத்தில் ஆக்கம் அருமை .வாழ்த்துக்கள் சகோ .நன்றி பகிர்வுக்கு .இன்று என் தளத்தில் நகைச்சுவை உள்ளது .
காணத்தவறாதீர்கள்......

ஸ்வீட் ராஸ்கல் said...

மிக்க நன்றி சகோ.தங்களின் வருகைக்கும்,கருத்தை பகிர்ந்து கொண்டதற்க்கும் தொடர்ந்து வாருங்கள்..உங்கள் தளத்தை காணத்தான் இதோ சென்றுகொண்டிருக்கிறேன்.படித்துவிட்டு கருத்தை பகிர்கிறேன்...