Tuesday, March 1, 2011

யுத்தம் செய் - விமர்சனமும்,அலசலும்


படத்தை பற்றி ப்ளாக் உலகின் பலரும் நிறைய எழுதி விட்டார்கள்,இருந்தாலும் நானும் எழுதுகிறேன்.இது கொஞ்சம் லேட் தான் இருதாலும் எழுதுகிறேன்,ஏனென்றால் என்னை சார்ந்த பலர் ப்ளாக் உலகிற்கு செல்வதில்லை.என் மூலமாக அவர்கள் இந்த படத்தை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்,மறக்காமல் பார்க்க வேண்டும் என்பதற்காகவும்,இந்த படம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதற்க்காகவும்,இப்படி ஒரு படத்தை உருவாக்கிய இந்த டீமை வாய் வலிக்கும் வரை பாராட்டினாலும் தகும்,நானும் அவர்களை புகழ வேண்டும் என்பதற்க்காகவும்,நான் பாராட்டுவது அந்த டீமுக்கு தெரியப்போவதில்லை என்றாலும்,நல்ல படைப்புகளையும்,படைப்பாளிகளையும் நிச்சயம் பாராட்டவேண்டும் என்பதற்காகவும் எழுதுகிறேன்.பொதுவாக நான் அதிகம் ப்ளாக் எழுதுவதில்லை.எனக்கு மிகவும் பிடித்து,என்னை பாதித்தால் மட்டுமே அந்த படத்தை பற்றி எழுதுவேன்.அந்த வரிசையில் அங்காடித்தெருவுக்கு பிறகு யுத்தம் செய்...

அப்படி என்ன கதை படத்தில்,த்ரில்லர் தான்.ஆனால் தமிழ் சினிமா இதுவரை தொடாத கதை,தொட பயப்படும் கதை.
சென்னையில் ஒரு குறிப்பிட்ட போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் ஏதோ சில உடல்களுக்கு சொந்தமான முழங் கைகள் துண்டாக வெட்டப்பட்டு ஒரே மாதிரியான கவர்களில் பேக் செய்து,ஒரே மாதிரியான அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் வீசப்படுகின்றன. இது தொடர்ந்து பல முறை நடக்கிறது.சென்னை போலீஸ் மிரண்டு போகிறார்கள்.இந்த கேஸ் CBCID இன்ஸ்பெக்டரும்,தன் தங்கையை தொலைத்து விட்டு அவளை தேடிக்கொண்டிருக்கும் அண்ணனான சேரனிடம் ஒப்படைக்கபடுகிறது,இவை ஒருபுறம் இருக்க மறுபுறம் சில கொலைகள் அரங்கேறுகிறது,பெண்கள் தொடர்ந்து கடத்தப்படுகிறார்கள் என்று கதை சூடு பறக்க ஆரம்பிகிறது.கைகள் வெட்டப்படுபவர்கள் யார்?ஏன் கைகள் வெட்டப்படுகிறது?யார் வெட்டுகிறார்கள்?கொலை செய்யப்படுபவர்கள் யார்?ஏன் கொலை செய்யப்படுகிறார்கள்?யார் கொலைசெய்கிறார்கள்?ஏன் பெண்கள் கடத்தப்படுகிறார்கள்?யார் கடத்துகிறார்கள்? இப்படி கதையில் பல முடிச்சுகள் விழுந்து கொண்டே இருகின்றன.இப்படி விழும் முடிச்சுகளை எப்படி அற்புதமாக அவிழ்க்கிறார் CBCID இன்ஸ்பெக்டர் சேரன்?.என்ன ஆனது?ஏன் இப்படி நடக்கிறது?முடிவு என்ன என்று சுவாரஸ்யத்தின் உச்சத்திற்கே சென்று புலனாய்வு செய்து (Investigation) முடிக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.முதலில் இப்படி ஒரு கதையை தைரியமாக எடுத்ததற்காகவே இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.அதோடு நிற்காமல் அதை மிகவும் திறம் பட திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்து படத்துடன் ஒன்றி நம்மையும் Investigation செய்ய வைத்திருப்பது மிஷ்கின்னின் தனித் திறமை.படம் பார்க்காதவர்கள் சீக்கிரம் தேட்டர் சென்று பாருங்கள்...
சரி இனி படத்தை பற்றியும் படத்தின் கதாபாத்திரங்களை பற்றியும் ஒரு சிறு அலசல்...


திருமதி லக்ஷ்மி:
படத்தின் முக்கிய கதாபதிரங்களில் இவர் மிக முக்கியமானவர்.முதலில் இந்த கதாபாத்திரதிற்க்கு மிக பிரபலமான நடிகை ஒருவரை அணுகி இருக்கிறார் மிஷ்கின்.ஆனால் அவர் மொட்டை அடிப்பதக்கு ஒத்துக்கொள்ளாததால் அவர் லக்ஷ்மி மேடமை தேர்வு செய்திருக்கிறார்.சும்மா சொல்ல கூடாது,லக்ஷ்மி மேடம் வாய்ப்பு கிடைத்த இடத்திலெல்லாம் பின்னி பெடலெடுத்திருக்கிறார்.அன்னபூரணி என்ற அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.முதலில் மொட்டை அடித்ததர்க்கே அவருக்கு ஒரு தனி விருது கொடுக்க வேண்டும்.இன்று பல ஆண்களே மொட்டை அடித்து கொள்ள தயங்கும் நேரத்தில் அவர் இந்த கதாபாத்திரத்தை எவ்வளவு காதலித்திருந்தால் மொட்டை அடிக்க ஒத்து கொண்டிருப்பார்.குறிப்பாக அவர்களுடைய மகள் இறந்ததை பார்த்த உடன் அவர் உறைந்து போய் கீழே விழும் காட்சி,தன் மகன் கீழே விழுந்து கிடக்கும் பொது Y.G வண்டியை நிறுத்த சொல்லியும் நிற்காமல் செல்லும் காட்சி,மொட்டை அடித்துக்கொண்டு ஒருவனை சின்னா பின்னமாக வெட்டும் காட்சி,இன்ஸ்பெக்டர் எசக்கி முத்துவை தலையில் வெட்டி கொல்லும் காட்சி,இறுதியில் அவ்வளவு க்ரூரத்தயும் மறந்து அந்த பெண்ணை பார்த்து சுஜா சுஜா என்று அழும் காட்சி,என் மகளை விட்டுடு டா என்று செல்வா விடம் கெஞ்சும் காட்சி,இறுதியில் அவருக்கு ஏற்படும் முடிவு,இப்படி பல இடங்களில் அரங்கம் அதிர கைதட்டல்களையும்,கண்களை குளமாக்கும்படியும் நடித்திருக்கிறார்.இந்த வருடம் சிறந்த குணசித்திர நடிகைக்கான விருது கண்டிப்பாக இவருக்கு தான்.இந்த படம் இவரின் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான மறக்க முடியாத படம்.படம் முடிந்து வெளியில் வந்தவுடன் கண்களை மூடினால் என் கண்களில் நின்ற இரண்டு பேரில் இவரும் ஒருவர்.இன்னொருவர் அவரை பற்றித்தான் அடுத்தது.

ஜெயப்பிரகாஷ்:
முதலில் இவர் ஒரு நல்ல தயாரிப்பாளர்.ஆனால் இவரில் ஒளிந்து கொண்டிருந்த மிக சிறந்த நடிகனை வெளியில் கொண்டு வந்த சேரனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.மனிதர் யூதாஸ் இஸ்காரியோத் என்ற வித்யாசமான கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார்.இந்த பெயர் ஏன் என்று நானும் யோசித்தேன் ஆனால் இறுதியில் இந்த பெயர் வைக்க பட்டதற்கான அர்த்தம் தெரிந்தவுடன் அரங்கம் அதிர்கிறது அனைவரின் கைதட்டல்களால்.இதுவரை தான் செய்த அனைத்து கதாபாதிரங்களையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார்.அந்த பயங்கரமான இடத்தில அவரை காண்பிக்கும் முதல் காட்சியிலேயே அசால்டாக தூங்கிக்கொண்டு அசத்தியிருக்கிறார்.ஒரு நிஜ Archaeologist ஆகா வாழ்ந்திருக்கிறார்.இறுதியில் சேரனிடம் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் அரங்கம் அதிர கைதட்டல் வாங்குகிறார்.அந்த கடைசி சீனில் எதை சொல்லவதென்றே தெரியவில்லை அனைத்து வசனங்களுமே அபாரம்.அதை பேசும் விதம் அதை விட சூப்பர்.அந்த குண்டடி பட்டு தான் பிழைக்க மாட்டேன் என்று சொல்லி அதற்க்கான விளக்கத்தை சொல்லும் வசனம் இதுவரை எவரும் செய்ததில்லை,அவ்வளவு detailed சீன் அது.இறுதியில் அவர் நம்மை பார்த்து கேட்கும் கேள்வி,ஐயோ என்ன சொல்லவதென்றே தெரியவில்லை.இந்த வருடம் சிறந்த குணசித்திர நடிகர் இவர் தான்,அதில் துளியும் சந்தேகம் வேண்டாம்.

ஒளிப்பதிவாளர் சத்யா:
இவர் தொழில் கற்ற இடம் இவரின் உழைப்பில் தெளிவாக தெரிகிறது.ஆம் இவர் P.C இன் அசிஸ்டென்ட் என்பது பலருக்கு தெரியும் என்று நினைகிறேன்.படத்தின் முதல் காட்சியான அந்த மழை பெய்யும் காட்சியிலேயே அசத்திவிட்டார்.ஒரு சில இடங்களை உற்று காண்பித்து விட்டு பிறகு மெதுவாக கேமராவை நகர்த்துவது,அட்டை பெட்டிகளை டாப் ஆங்கிளிலிருந்து காட்டுவது,குறிப்பாக அந்த இண்டர்வல் பிளாக் சண்டை காட்சி.இறுதிக்காட்சியில் அந்த பையன் படிக்கட்டுகளில் மேல்நோக்கி செல்வதும்,பக்கத்தில் அம்புக்குறிகள் அவன் வெளிச்சத்தை நோக்கி செல்கிறான் என்று சூசகமாக காட்டப்படுவதும் மிக அருமை.இப்படி பல இடங்களில் மிரட்டிருக்கிறார்.படத்தின் ஒவ்வொரு காட்சியையும் தன் கேமராவால் செதுக்கியிருக்கிறார்.படத்தை தாங்குகின்ற தூண்களில் இவரும் முக்கியமானவர்.படத்தின் இறுதிக்காட்சியில் மகேஷ் முத்துசுவாமி என்று மிஸ்கினின் ஆஸ்தான கேமராமேனின் பெயரை சொல்லி அவரையும் நினைபடுத்துவது இருவருக்கும் உள்ள நல்ல நடப்பை காட்டுகிறது.தமிழ் சினிமாவுக்கு ஒரு சிறந்த கேமராமேன் கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.

எடிட்டர் காகின்:
ஒரு படத்திற்கு எடிட்டிங் எவ்வளவு முக்கியம் என்பதை இவருடைய வேலையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.கனக்கச்சிதமாக தன் வேலையை செய்திருக்கிறார்.சூப்பர் காகின்...

இசையமைப்பாளர் கே:
பெயரிலேயே வித்யாசம்,இசையிலும் அப்படித்தான்.வசனம் இல்லாத இடங்களில் அவர் இசை பேசுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.த்ரில்லர் படத்திற்கே உண்டான மிரட்டல் இசை.இளையராஜா சாரைப் போல வயலினாலேயே மிரட்டிருக்கிறார்.இவரின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.கன்னிதீவு பொண்ணா பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்கும் என்னபதில் சந்தேகமே வேண்டாம்.M.L.R கார்த்திகேயனும்,ராகிப் ஆலம் அவர்களும் மிக அருமையாக இந்த பாடலை பாடி ரசிக்க வைத்து ஆட்டம் போட வைக்கிறார்கள்.ஒரு சின்ன குறை இந்த பாடலில் அமீருக்கு பதில் வேறு யாரையாவது ஆட வைத்திருக்காலம்.இன்னும் நன்றாக இருந்திருக்கும்.நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் கே.இவரும் சத்யாவும் மிஷ்கினின் வலது இடது கரங்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

தயாரிப்பாளர்கள் AGS :
வர வர இவர்களும் மிகச்சிறந்த படங்களையே தேர்வு செய்து தயாரிக்கிறார்கள்,மைனா என்ற அருமையான படைப்பிற்கு பிறகு மற்றுமொரு வித்யாசமான தமிழ் சினிமா மறக்க முடியாத சூப்பர் படம்.இவர்களும் ஐயங்காரன் போல் ஆகிவருகிறார்கள்,அடுத்த படைப்புகளும் எதிர் பார்க்க வைக்கும் அருமையான படைப்புகளே (அவன் இவன்,மாற்றான்).காத்திருப்போம்.நல்ல தயாரிப்பாளர்கள்.வாழ்த்துக்கள்.

சேரன்:
இதுவரை நாம் பார்த்திராத சேரன்,அவர் ஏற்று நடித்த கதாபாதிரங்களிலேயே மிகச் சிறந்தது இது தான்.J.K என்ற அந்த கேரட்டராகவே வாழ்ந்திருக்கிறார் சேரன்.கோபமும்,தங்கையை காணவில்லையே என்ற வலியும் நிறைந்த முகத்துடன் படம் முழுவதும் முகத்தில் ஒரு துளி சிரிப்பு கூட இல்லாமல் வந்து கலக்கிருகிறார்.பொதுவாக இப்படி பட்ட கதையில் சேரன் போன்ற ஹீரோவை தேர்வு செய்ய யாராக இருந்தாலும் தயங்குவார்கள்.ஆனால் மிஷ்கின் தான் தேர்வு செய்தால் சரியாக தான் இருக்கும் என்று நிரூபித்திருக்கிறார்.சேரனும் அந்த சீரியஸ்நஸ் தெரிந்து உணர்வு பூர்வமாக நடித்திருக்கிறார்.நிறைய இடங்கள் இருக்கிறது சேரனுடைய நடிப்பை சொல்ல.அவருடைய அசிஸ்டன்ட்ஸ் 2 பேருடைய profileகளை குப்பை தொட்டியில் போடும் காட்சி,Interval சண்டை காட்சி இன்னும் இப்படி பல காட்சிகளில் சேரன் கைத்தட்டல்களை பெருகிறார்.சேரனுடைய நடிப்பு வரலாற்றில் இது ஒரு மையில் கல்.

மிஷ்கின்:
தமிழ் சினிமாவின் மிகசிறந்த இயக்குனர்களில் ஒருவர்.நந்தலாலா என்ன ஒரு மென்மையான படம் அதற்க்கு பிறகு இப்படி ஒரு மிரட்டலான த்ரில்லர்.முழுவதும் மாறுபட்ட களத்தை கையில் எடுத்து வெற்றி பெற்று அசைத்திருக்கிறார்.இது மிஸ்கினின் படம் என்று படத்தை பார்க்கும் என்னை போன்ற அவரின் ரசிகர்களுக்கு தெளிவாக தெரியும்,ஆனால் புதியவர்களுக்கு புதுமையாகவே இருக்கும்.படத்தில் துவக்கம் முதல் இறுதி வரை எந்த இடத்திலும் மிஷ்கின்னின் பெயர் இடம் பெறவில்லை,அது ஏன் என்று தெரியவில்லை.அவருடைய ரசிகர்களுக்கு படத்தை பார்க்கும் போதே தெளிவாக தெரியும் என்பதாலோ என்னவோ.இந்த படம் மிஷ்கினை இன்னும் ஒரு படி மேலே தூக்கி வைத்திருக்கிறது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் சேர்த்திருக்கிற்து.மிஷ்கின் எல்லோரையும் நன்றாக bend எடுத்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

Y.G சார் கலக்கியிருக்கிறார்,நெடு நாட்களுக்கு பிறகு வெள்ளித்திரைக்கு வந்தாலும் நடிப்பில் இன்னும் அவர் அதே Y.G தான்.ஒரு பெண் குழந்தையை கொடுமையான விதத்தில் பறிகொடுத்த ஒரு உண்மையான தந்தையின் வலியை கண்முன் நிறுத்துகிறார்.குறிப்பாக கோபமும்,வெறியும் கலந்த வலியுடன் அவர் சுஜா என்று கத்துவதும், இறுதிக்காட்சியில் தன் மனைவியை தூக்கிவிட்டு போய் நம் கடமையை செய் என்று சொல்லாமல் சொல்லும் காட்சிளும் OLD IS GOLD என்று நிரூபித்திருக்கிறார்.செல்வா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்,சேரனின் தங்கையிடம் நான் ஒரு போலீஸ் காரன் இன்னொரு போலீஸ் காரனிடம் தோற்க்க மாட்டேன் என்று அவர் பேசும் காட்சி பயம் கலந்த நம்பிக்கை.நெடு நாள் கழித்து வந்தாலும் நல்ல ஒரு Re -entry.இந்த படத்தில் Y.G யும்,செல்வாவும்,அஞ்சாதேவில் பாண்டியராஜன்.இப்படி திறமையான தங்கங்களை தேடிபிடித்து தூசு தட்டி பட்டை தீட்டியிருக்கும் மிஷ்கினுக்கு Hats off.மாணிக்கவிநாயகம் சார், இவரை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.நமக்கே இவரை எதிரில் பார்த்தால் அடிக்க வேண்டும் போல் தோன்றும் அந்த அளவுக்கு நடிப்பில் அசத்தியிருக்கிறார்.இவர்கள் மட்டும் அல்ல இன்ஸ்பெக்டர் எசக்கி முத்து,Y.G சார்,லக்ஷ்மி மேடம் இவர்களின் மகன்,கிட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் வரும் அவர், பிணத்தை பார்த்ததில் உறைந்து போய் கிடக்கும் சிறுவன்,பிணஅறை ஊழியர்,சப்வே காட்சியில் அந்த கைகளை பார்த்து அழும் அந்த அம்மா,சேரனின் அசிஸ்டன்ட்ஸ்,சேரனின் உயர்அதிகாரி, கமிஷனர்,இன்னும் படத்தில் பங்கு பெற்ற அனைவரும் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் மட்டும் இன்றி இன்னும் படத்திற்கு பின்புறம் இருந்து பாடுபட்ட அமரன்,Action பிரகாஷ்,வெங்கட் மாணிக்கம்,ஜோயல் பென்னெட்,சுரேஷ்,ஹக்கிம்,உதயகுமார்,ஹரிஷங்கர்,நிகில்,Assistant directors,லைட் பாய்ஸ்,Production assistants இன்னும் நான் எழுத மறந்த அனைவருமே தங்களது உழைப்பை கொட்டி இருக்கிறார்கள்.இவர்களுக்கும் நான் மேற்கூறிய அனைவருக்கும் வாய் வலிக்கும் வரை வாழ்த்துக்களும்,கைவலிக்கும் வரை கைதட்டல்களும்.

படம் புரியவில்லை என்பதெல்லாம் சுத்த பேத்தல், நமக்காக தான் 200,300௦௦ நாட்கள் கஷ்டப்பட்டு படம் செய்கிறார்கள் இயக்குனரும் அவருடைய டீமும்,அவர்களுக்காக ஒரு 2 மணிநேரம் நம்மமுடைய செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு,எதை பற்றியும் சிந்திக்காமல்,படத்தோடு ஒன்றி பார்த்தால் நிச்சயம் படம் நன்றாக புரியும்.இதை நான் சொல்லவில்லை மிஷ்கினே சொன்னது.தமிழ் சினிமா வரலாற்றில் த்ரில்லர் என்று எடுத்தால் அதில் முதல் 5 இடங்களுக்குள் இந்த படம் நிச்சயம் இருக்கும்.சிகப்பு ரோஜாக்காளுக்கு பிறகு ஒரு நல்ல த்ரில்லர் படம்.எது எப்படியோ தமிழ் சினிமா கொண்டாடப்படவேண்டிய படம் இது.

யுத்தம் செய் - இம்சை செய் அநீதிக்கெதிராக...

7 comments:

ஆர்வா said...

ஹாய் மச்சி ரொம்ப அனுபவிச்சி விமர்சனம் எழுதி இருக்கே. நிறைய விஷயங்களை நுணுக்கமா கவனிச்சு எழுதி இருக்கே. குறிப்பா லக்ஷ்மி மேடம், ஜெயப்பிரகாஷ் பத்தி ரொம்ப ஆழ்ந்து எழுதி இருந்தது நல்ல ரசிகனை வெளிப்படுத்தியது. நீ தொடர்ந்து விமர்சனம் எழுத ஆரம்பித்தால் பதிவுலகில் ஒரு கலக்கு கலக்குவாய் என எதிர்பார்கிறேன். அடிக்கடி தொடர்ந்து எழுது மச்சி.. ரொம்ப கேப் விடாத..

ஆர்வா said...

இயக்குனர் கதாநாயகன், துணை கதாபாத்திரங்கள், எடிட்டர், கேமரா மேன் என அனைவரைப்பற்றியும் மிக விளக்கமாக எழுதி இருந்தது நன்றாக இருந்தது. அசத்தல் விமர்சனம். பயணம் படம் பத்தி எழுதுவேன்னு நினைச்சேன்..

விஷ்ணு said...

nalla vimarsanam nice.............

ஸ்வீட் ராஸ்கல் said...
This comment has been removed by the author.
ஸ்வீட் ராஸ்கல் said...

//கவிதை காதலன் said//

மச்சி உன்னுடைய கமெண்டை தான் டா நான் ரொம்ப எதிர்பார்த்தேன்.நான் மட்டும் கமெண்ட் ல கலக்கலா நீயும் தான் டா.மச்சி இதுவே ரொம்ப லேட்டா எழுதி இருக்கேன் டா.பயணம் நிச்சயம் சூப்பர் படம் டா.எழுதணும்.

ஸ்வீட் ராஸ்கல் said...

//விஷ்ணு said //

மச்சி கல்யாணம் ஆனதுக்கப்புறம் நீ ரொம்ப ரசனை மிக்கவனா ஆயிட்ட டா.எல்லாதையும் ரசிக்குற.ok ok...

Unknown said...

பார்த்தி கலக்குற டா கமெண்ட் சூப்பர் பா. தொடர்ந்து ப்ளாக் எழுது எங்களுடைய எழுத்துக்கள்,எப்போதும் உன் கூட இருக்கும்....