Thursday, September 1, 2011

விநாயகரைப் கும்பிடும் போது குட்டு போட்டுகொள்வது ஏன்?

படித்ததில் பிடித்தது-Part-2.
நண்பர்களே நான் ஏற்கனவே சொன்னது போல,நான் படித்து,கேட்டு,பார்த்து பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டுவருகிறேன்.அந்த வகையில் இன்று நான் பார்த்து மிகவும் பிடித்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

நாம் விநாயகப்பெருமானை கும்பிடும் போது ஏன் தலையில் குட்டு போட்டுகொள்கிறேம் தெரியுமா?.

ஒருமுறை பொன்னி,பவானி,நர்மதை,தபதி,பென்னை ஆகிய 5 வற்றாத ஜீவ நதி சகோதரிகளும் சந்தோஷமாய் ஆடி,பாடி பொழுதை கழித்துக் கொண்டிருந்தனர்.அப்போது பொன்னி தன் சகோதரிகளிடம்,"நாமே இந்த உலகத்தில் சிறந்தவர்கள்.நம்மை மிஞ்ச யாருமில்லை.இந்த உலகத்தையே நாம் தான் செழிப்பாக வைத்திருக்கிறோம்.எம்பெருமான் சிவனின் தலையிலேயே நம்மை போன்ற ஒரு நதி தான் குடி கொண்டிருக்கிறது.ஆகவே நாம் தான் சிறந்தவர்.நம்மை மிஞ்ச யாரும் இல்லை என்ற ஆணவத்தோடு பேசிக்கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக அகத்திய மாமுனிவர் வந்துகொண்டிருந்தார்.அப்போது அவரை பார்த்த பொன்னி தன் சகோதரி பவானியிடம் யார் இந்த குள்ள முனிவர் என்று கிண்டலாக கேட்க்க,அவர் அகத்தியரை பற்றி சொல்லி விட்டு அவரிடம் இப்படி மரியதை இல்லாமல் பேசாதே அவர் ஈசனின் அருள் பெற்றவர் என்று கூறினார்.ஆனால் பொன்னியோ கேட்கவில்லை,மாறாக இந்த முனிவர்களே ஆண்டவனை தினமும் காலையிலும்,மாலையிலும் பூஜிக்க நம்மையே நாடி,தேடி வந்துதானே குளிக்கின்றனர் என்று திமிராக பேசிவிட்டு,அங்கு வந்த அகத்தியரை அவருடய உயரத்தையும்,உருவத்தையும் வைத்து கிண்டல் செய்ய தொடங்கினார்.

பொன்னியின் இந்த செயலை கண்ட அகத்தியர் மிகுந்த கோபமுற்று பொன்னியை எச்சரித்தார்.ஆனால் பொன்னி இன்னும் அதிகமாய் அவரை ஏளனம் செய்ய,கோபத்தின் உச்சத்திற்கே சென்றார் அகதியர்.அதன் விளைவாக தன் கமண்டலத்தில் அவ்வளவு பெரிய பொன்னி நதியை அடக்கி வைத்துவிட்டர்.பொன்னியால் அங்கும்,இங்கும் ஓடித்திரிய முடியாமல் அகத்தியமாமுனிவரின் கமண்டலத்தில் ஒடுங்கி,அடங்கி போனாள்.இதை கண்ட மற்ற சகோதரிகள் நால்வரும் என்ன செய்வது என்று அரியாமல் நாரதரிடம் போய் முறையிட்டனர்.அவர் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார்.அவர் இந்த விஷயத்தை விநாயகப்பெருமானிடம் கொண்டு சென்று,காப்பாற்ற வழி செய்யுமாறு கேட்டார்.பெண்மைக்கு ஆணவம் கூடாது.அகத்தியரிடம் அவள் பேசியது தவறு,அதற்கேற்ற தண்டனையை தான் அவள் பெற்றிருக்கிறாள் என்று கைவிரித்துவிட.நாரதர் இது ஜீவ நதியாயிற்றே,இது பரந்து,விரிந்து ஓடினால் தானே நன்மைதரும்.அது படைக்க பட்ட நேக்கமும் அதுதானே என்று விநாயகரிடம் இன்னும் அதிகமாய் கெஞ்சினார்.சரி நான் பார்த்துக்கொள்கிறேன் என்று விநாயகர் அவரை அனுப்பிவைத்தார்.

பின்பு விநாயகர் நேராக அகத்தியர் இருக்கும் இடத்திற்க்கு போய்,என்ன செய்து பொன்னியை காப்பாற்றலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தார்.அப்போது விநாயகப்பெருமான் காக்கை போல் மாறி அகத்தியரின் கமண்டலத்தை கீழே தள்ளிவிட,பொன்னி மீண்டும் ஆறாக பெறுக்கெடுத்து ஓட ஆறம்பித்தாள்.இதை கண்ட அகத்தியர் மிகுந்த கோபத்துடனும்,ஆச்சர்யத்துடனும் ஆற்றைப் பார்த்துகொண்டிருந்தார்.விநாயகப்பெருமான் உடனே காக்கை வடிவில் இருந்து ஒரு சிறுவனாக மாறி அங்கிருந்து ஓட ஆரம்பித்தார்.இதை கண்ட அகத்தியர் அந்த சிறுவனை பிடித்து ஏன் இப்படி செய்தாய் என்று கோபத்துடன் கேட்டார்.இதற்க்கு அந்த சிறுவன் நீர் எதற்காக இந்த ஆற்றை உங்கள் கமண்டலத்தில் அடைத்து வைத்தீர்கள் என்று எதிர் கேள்வி கேட்டார்.அதற்க்கு அகத்தியர் அது என் சொந்த பிரச்சனை என்று சொன்னார்.அதற்க்கு அந்த சிறுவன் ஆற்றை விடுவித்தது பொது பிரச்சனை என்று பதில் சொன்னார்.மிகுந்த கோபமுற்ற அகத்தியர் அந்த சிறுவனை குட்ட முயன்றார்,உடனே விநாயகர் தன் சொந்த உருவத்திற்க்கு மாறினார்.உடனே அகத்தியர் மிகுந்த கலக்கமுற்று "ஐயனே என்ன விளையாட்டு இது"என்று கேட்க,விநாயகர் ஏன் குட்டவில்லை என்று கேட்டார்.


அதற்க்கு அகத்தியர் தன் தலையில் குட்டிக்கொண்டு மன்னிக்க வேண்டினார்.அது மட்டும் இல்லாமல் தவறு செய்யும் அனைவரும் இனி உம்மிடம் வந்து மனமுவந்து வேண்டி குட்டு போட்டுகொண்டால் அவர்கள் பாவமும் மன்னிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.விநாயகரும் அப்படியே அருள் புரிந்தார்.

நாரதர் அங்கு வந்து பொன்னி தன் தவறை உணர்ந்துவிட்டாள்,இன்று முதல் அவள் வேறு பெயர் பெற்று அழைக்க பட வேண்டும் என்று கூறி அகத்தியரை வேறு பெயர் வைக்குமாறு கேட்டுகொண்டார்.உடனே அகத்தியர்,விநாயகர் காக்கை வடிவில் வந்து கமண்டலத்தை தட்டி விட்டு பொன்னியை விரிந்தோடச்செய்த்ததால் இன்று முதல் பொன்னி காவிரி என்று அழைக்கப்படுவாள் என்று அருள் புரிந்தார்.பொன்னியும் அகத்தியரிடம் மன்னிப்பு கேட்டு,என்னை பற்றி ஒரு பாடல் பாடுங்கள் சாமி என்று தாழ்மையுடன் கேட்க,அகத்தியர் அழகாக காவிரியை பாடி அங்கிருந்து சென்றார்...

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டு போட்டு விட்டு செல்லுங்கள்.

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...

10 comments:

Prabu Krishna said...

கொலுக்கட்டை தின்னுட்டு நல்லா யோசிச்சு இருக்க மாப்பு.

சி.பி.செந்தில்குமார் said...

புதிய தகவல்

மாணவன் said...

விநாயகர் பற்றிய புதிய தகவல் பகிர்வுக்கு நன்றி

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் நண்பரே

விஷ்ணு said...

nice......

shobijai said...

nice ,,good 1...

ஸ்வீட் ராஸ்கல் said...

@ பிரபு கிருஷ்ணா,
மிக்க நன்றி மாப்பு,வருகை புரிந்தமைக்கும்,கருத்தை பகிர்ந்தமைக்கும்.என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்.தொடர்ந்து வா மாப்பு...

ஸ்வீட் ராஸ்கல் said...

@ சி.பி.செந்தில் குமார்,

மிக்க நன்றி நண்பரே.தொடர்ந்து வாருங்கள்.

ஸ்வீட் ராஸ்கல் said...

@ மாணவன்

என் தவறை சூசகமாக சொல்லி திருத்த வைத்ததற்கு மிக்க நன்றி தோழா.கருத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.தொடர்ந்து வாருங்கள்.

ஸ்வீட் ராஸ்கல் said...

@ விஷ்ணு,

கருத்தை பகிர்ந்தமைக்கும்.தவறை சுட்டி காட்டி அதை திருத்த வைத்தமைக்கும் மிக்க நன்றி மச்சி.தொடர்ந்து வா...

ஸ்வீட் ராஸ்கல் said...

@ Shobijai,

ஹாய் ஷோபி,மிக்க நன்றி உன் கருத்தை பகிந்தமைக்கு.நீ தொடர்ந்து வருவது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இனியும் தொடர்ந்து வருவாய் என்று நம்புகிறேன்.