Monday, September 19, 2011

எங்கேயும் எப்போதும் - விமர்சனம்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நல்ல படம் என்பதே இல்லாமல் போய்விட்டது. செம படம்,சூப்பர்,இப்படி ஒரு படம் பார்த்து எவ்ளோ நாளாச்சி என்று மக்கள் வாய் விட்டு,கண்ணீர் மல்க சொல்லி கேட்கவேயில்லை.இப்படி அனைத்து ஏக்கங்களையும்,குறைகளையும் ஒட்டுமொத்தமாக தீர்க்குமளவுக்கு ஒரு படம் வந்திருக்கிறதென்றால் அது எங்கேயும் எப்போதும் தான்.தமிழ் சினிமாவில் எப்போதாவது பூக்கும் குறிஞ்சி பூ இந்த எங்கேயும் எப்போதும்.

சமீபத்தில் வந்த நிறைய படங்களை பார்த்தேன்.படம் முடிந்து வெளியே வரும் போது என்னடா படம் இது என்று கோவம் தான் வந்தது.அந்த அளவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.மிகுந்த எதிர்பார்ப்போடு சென்று ஏமார்ந்து வந்தது தான் மிச்சம்.ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உள்ளே சென்று உட்கார்ந்து,வெளியில் வரும் போது கண்ணீர் மல்க என்ன படம் டா வாய்ப்பே இல்ல என்று சொல்லித்தான் வெளியே வந்தேன்.அழகான திரைக்கதை,பில்டப் இல்லாத அம்சமான நடிப்பு,ரம்மியமான இசை,கல்நெஞ்சையும் கரையவைக்கும் கிளைமாக்ஸ் இப்படி பல கலவைகள் ஒன்றாக கலந்து,கொடுத்த காசுக்கு திருப்தியை கொடுக்கும் அருமையான காவியம்.
கதை பெரிதாக ஒன்றும் இல்லை,இரண்டு வெவ்வேறு காதல் கதைகள் அழகாக பயணிக்கும் வாழ்க்கையில் விதி ஏற்படுத்தும் விளையாட்டு தான் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. ஆனால் இந்த கதையை இப்படி மிகமிக அழகாக திரைகதை பண்ண முடியுமா என்றால்,முடியும் என்று ஆச்சர்யபடுத்தி இருக்கிறார் இயக்குனர் சரவணன்.படத்தின் தொடக்க காட்சியிலேயே ஒரு பயங்கரமான விபத்தை காட்டிவிட்டு,4 மணிநேரத்திற்கு முன்பு என்று போட்டு விட்டு.பிறகு மீண்டும் திரைகதையில் சற்று வேகம் கூட்டி 6 மாதங்களுக்கு முன் என்று தொடங்கும் கதை வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிப்பையும்,அழகான காதலையும்,நல்ல நல்ல பாடல்களையும் அட போடவைக்கும் அற்புதமான
காட்சிகளையும் சுமந்துகொண்டு சூப்பராக செல்கிறது.

சென்னையில் இன்டர்வியுக்கு வரும் அனன்யா அவருடைய ஜோடியான சர்வாவுடன் இணைந்து வரும் காட்சிகளும்,அடிக்கும் லூட்டிகள் வயிறை வலிக்க வைக்கும் காமெடி ரகம்.அதுவும் அனன்யா வாய்ப்பே இல்ல அருமையான நடிப்பு.குழந்தை தனம் கலந்த இயல்பான இவரின் நடிப்பு நிச்சயம் சபாஷ் போடவைக்கும். இவருடைய நடிப்பும்,உடல் பாவனைகளும் லைலாவை நினைவுபடுத்துகிறது.ஊர்வசி,லைலா வரிசையில் நிச்சயம் அனன்யாவுக்கு இடம் உண்டு.சர்வா-அனன்யா இவர்களுக்குள் வரும் காதல் இயல்பாக,நம்பும் விதத்தில் அமைத்திருப்பது அருமை.அனன்யாவுக்கு நாடோடிக்கு பிறகு அமைந்த ஒரு நல்ல படம்.ஒரு நல்ல திருப்புமுனை என்று கூட சொல்லலாம்.சர்வாவும் கிடைத்த இடத்தில் எல்லாம் நல்லா ஸ்கோர் பண்ணி இருக்காரு.

ஜெய்-அஞ்சலி இன்னொரு காதல் ஜோடி,இருவருமே நன்கு நடிக்க தெரிந்தவர்கள் என்பதை நிரூபித்திருகிறார்கள்.குறிப்பாக அஞ்சலி அற்புதமான நடிப்பை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியிருக்கிறார்.அஞ்சலி தான் ஹீரோ,ஜெய் தான் ஹீரோயின்.அஞ்சலி மிகவும் தைரியமான ஒரு போலீஸ்காரரின் பெண்ணாக வாழ்ந்திருக்கிறார்.காதலிக்க துவங்கிய உடனே HIV டெஸ்ட் செய்வதும்,அதை தொடர்ந்து அவர் பேசும் வசனங்களும்,உடல் தானம் செய்யச் செய்வதும்,அதை தொடர்ந்து அவர் பேசும் வசனங்களும் தேட்டர் அதிர கைத்தட்டல்கள் வரும் காட்சிகள்.வரும் போது சம்பளக்கவரை எடுத்துவா என்று ஜெய்யிடம் சொல்லி அதை கண்ணா பின்னாவென செலவு செய்து ஜெய்யை அலற வைக்கும் காட்சி,நான் மட்டும் ஆம்பளையா இருந்திருந்தா உலகத்துல இருக்குற எல்லா சரக்கையும் அடிச்சி இருப்பேன் என்று ஜெய்யிடம் சொல்லும் காட்சி,நீ வேணா கல்யாணத்துக்கு அப்புறம் கட்டிக்கோ நா இப்பவே கட்டிகுறேன் என்று கட்டி பிடிக்கும் காட்சி.அவர் வேலை செய்யும் இடத்திற்கே வந்து ஜெய்யிடம் பேசும் காட்சி,ஐ லவ் யூ என்று சொல்லும் காட்சி இப்படி பல இடங்களில் அஞ்சலி அசத்தோ அசத்துன்னு அசத்தி அதகளபடுத்துகிறார்.இறுதிக்காட்சியில் அவருக்கே உண்டான தனி நடிப்பின் மூலம் அனைவரையும் அழவைக்கிறார்.நிறைய இடங்கள் சொல்லலாம் அஞ்சலியின் நடிப்பை பற்றி ஆனால் இந்த இடம் போதாது.அங்காடித்தெருவுக்கு பிறகு அஞ்சலிக்கு அமைந்த நல்ல படம் இது.இன்னும் ஒரு மையில் கல் என்று சொல்லலாம்.நன்றாக நடிக்க தெரிந்தவர் கதைகளை ஒழுங்காக தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் மிகப்பெரிய இடத்துக்கு வரலாம்.

ஜெய்-சுப்ரமணியபுரத்திற்கு பிறகு நடித்திருக்கிறார்.கிடைத்த இடத்திலெல்லாம் அஞ்சலியுடன் போட்டி போட்டு அசத்தியிருக்கிறார்.இயல்பான நடிப்பு அற்புதமாக வருகிறது ஜெயக்கு.வீட்டுக்கு அடங்குன புள்ள மாரி என்னமா நடிச்சி இருக்காரு.ஜெய்,அஞ்சலியின் அப்பாவை பார்த்துவிட்டு வந்த பிறகு அஞ்சலி அவர் யாருன்னு தெரியுமான்னு கேட்டவுடன் ஏட்டு என்று சொல்வதும்,எனக்கு யார்ன்னு கேட்டதும் உங்களுக்கு மட்டும் என்ன ஐ.ஜி யா உங்களுக்கும் ஏட்டு தானே என்று சொல்லு காட்சி.காபி ஷாப்பில் மசால் தோசை கேட்க்கும் காட்சி,அஞ்சலியை ஒரு தலையாக காதலிப்பவனிடம் போய் அடிவாங்கி வரும் காட்சி,அஞ்சலியின் அம்மாவுக்கு டாட்டா காட்டும் காட்சி,அஞ்சலியின் அப்பாவிடம் போய் பேசும் காட்சி,துணி கடையில் கிழிந்த ஜீன்ஸ் பேண்டை வாங்கும் காட்சி இன்னும் நிறைய இடங்களில் ஜெய் வயிறு வலிக்க சிரிக்கவும் வைக்கிறார்,அழகாக நடிக்கவும் செய்கிறார்.தொடர்ந்து தோல்வியே சந்தித்து வந்த ஜெய்க்கு இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனை என்று கூட சொல்லலாம்.தேவையான நேரத்தில் அருமையான படத்தில் நடித்து தன் நிலையை தமிழ் சினிமாவில் தக்க வைத்திருக்கிறார்.

இயக்குனர் சரவணன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மற்றுமொரு பொக்கிஷம்.தமிழ் சினிமாவில் பிழைத்துகொள்வார்.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்.அருமையான திரைகதை.இயல்பான வசனங்கள் என்று படத்தை அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைத்து 3 மணிநேரம் சீட்டை விட்டு எங்கும் நகர விடாமல் கட்டிப்போட்டு விடுகிறார்.தேவையான இடங்களில் பாடல்கள்.அதுவும் நல்ல பாடல்கள்.இப்படி ஒரு கதையை தயாரிப்பாளரிடம் எப்படி சொல்லி ஓகே பண்ணாருன்னே தெரியல.இதை எப்படி தயாரிப்பாளர் ஓகே செய்தார் என்பதும் மிகபெரிய ஆச்சர்யம்.படத்தை கமர்ஷியலாகவும் மட்டும் இல்லாமல் ஒரு நல்ல கருத்துடனும் கொடுத்திருக்கிறார்.இன்றைய சமுதாய விழிப்புணர்வுக்கு தேவைப்படும் அருமையான கருத்தை கொடுத்தது இன்னும் சிறப்பு.இன்றைய பல இயக்குனர்கள் சரவணனிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது.தேசிய விருதுக்கு நிச்சயம் இந்த படம் செல்லும்,விருதையும் வெல்லும்.சரவணன் சார் உங்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது.வாழ்த்துக்கள்.

இசையமைப்பாளர் சத்யா நல்ல இசையமைப்பாளர் என்பதை அழகாக சொல்லி இருக்கிறார்.அருமையான பாடல்கள்.மனதை வருடவும் செய்கின்றன,தாளம் போடவும் செய்கின்றன.அனைத்து பாடல்களுமே அற்புதம்.பின்னனி இசையும் அருமையாக இருக்கிறது.இவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது.வாழ்த்துக்கள் சார்.

முருகதாஸ்.சொல்லப்பட வேண்டிய தயாரிப்பாளர்.வெற்றி தயாரிப்பாளர்.அருமையான படத்தை தயாரித்த பெருமை என்றுமே இருக்கும் இவருக்கு.இப்படி ஒரு கதையை ஓகே செய்ததர்க்கே இவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.படத்தில் வரும் அந்த விபத்து காட்சி நம்மை நிச்சயம் ஒரு நிமிடம் பயப்படவைக்கும்.அருமையான கேமரா.தொடக்க காட்சியும்,இண்ட்ரவல் காட்சியும் அற்புதம்.க்ளைமாக்சில் அந்த ஆம்புலன்சின் பின் புறம் எழுதி இருக்கும் வசனத்துடன் முடிப்பது நச்.


படத்தின் சிறு சிறு கதாபாத்திரங்களும் மனதை விட்டு பிரிய முடியாமல் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள்.குறிப்பாக தன் மனைவியை 8 மாத கர்ப்பிணியாக விட்டு விட்டு வேலை விஷயமாக துபாய் சென்று 5 வருடங்களுக்கு பிறகு நாடு திரும்பி வரும் அந்த கணவர் கண்களை குளமாக்கும் கதாபாத்திரம்.ஜெய்யின் அம்மா கதாப்பாத்திரமும் அவர் தாரை தப்பட்டையை குறிப்பிட்டு படத்தின் துவக்கத்தில் பேசும் வசனம் இறுதியில் சரியாக அந்த கொடுமையான விஷயத்திற்கு சரியாக பொருந்துவது கல் நெஞ்சையும் கரைக்கும்.மனைவியை விட்டு பிரிய மனமில்லாமல் ஊர் வரை கூடவே வந்து விட வரும் கணவர்,பார்த்த உடனே காதல் வலையில் விழும் காதலர்கள்,அம்மாவுடன் துடுக்குத்தனமாக பேசும் குழந்தை.அஞ்சலியின் அப்பா,அஞ்சலியை ஒரு தலையாக காதலிக்கும் அந்த நபர்.அனன்யாவின் அக்கா இன்னும் படத்தில் வரும் அனைத்து கதாபத்திரங்களும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருகின்றனர்.இந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்த இயக்குனர் சரவணனுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.
நிச்சயம் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத,தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு படம் இந்த எங்கேயும் எப்போதும்.இப்படி பட்ட படத்தை தந்த இயக்குனரையும்,தயாரிப்பாளரையும்,அந்த குழுவையும் வாய் வலிக்கும் வரை பாராட்டினாலும் தகும்.
மொத்ததில் இந்த எங்கேயும் எப்போதும் - என்றென்றும் எப்போதும் மக்கள் மனதிலும் தமிழ் சினிமா வரலாற்றிலும்...

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டு போட்டு விட்டு செல்லவும்.

12 comments:

விஷ்ணு said...

அழகான படம்......
அற்புதமான விமர்சனம்.....
அதுவும் நீங்க முடிச்சிருக விதம் அருமை.....

" மொத்ததில் இந்த எங்கேயும் எப்போதும் - என்றென்றும் எப்போதும் மக்கள் மனதிலும் தமிழ் சினிமா வரலாற்றிலும்..."

இந்திரா said...

யதார்த்தமான விமர்சனம்.
படம் இன்னும் பார்க்கவில்லை. பதிவு பார்க்கத்தூண்டுகிறது.

இந்திரா said...

ஸ்வீட் ராஸ்கலின் வலைதளம் தானா என்று ஒரு நொடி குழம்பிவிட்டேன்.
ஏனெனில் நண்பரின் வலைதள அலங்காரமும் இதே போல் இருக்கும்.

http://pakkatamilan.blogspot.com/

கவிதை காதலன் said...

நல்ல படம்.. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது..சாலை விபத்துகள் பற்றிய எத்தனையோ செய்திகளைப் படிக்கிறோம்.. துக்கப்படுகிறோம். வருத்தப்படுகிறோம். ஆனால் அடுத்த நொடியே அதைப்பற்றி மறந்தும் விடுகின்றோம். ஆனால் இயக்குனர் சரவணன் இதைப்பற்றி எல்லாம் மறக்காமல் ஒரு திரைப்படத்தின் வாயிலாக நமக்கு ஒரு அலர்ட் வார்னிங் அடித்துள்ளார்.படம்பார்த்து முடித்த உடன் ரோட்டில் செல்லும் போது மெதுவாக செல்ல வேண்டும் என்று எண்ணம் நமக்கு ஏற்படுகிறதே, அதுதான் இயக்குனரின் வெற்றி.. ஹாட்ஸ் ஆப் சரவணன்.. தங்களின் விமர்சனம் வெகு நேர்த்தியாக உள்ளது..அருமை.. வாழ்த்துக்கள் ஸ்வீட் ராஸ்கல்

பிரதாப் said...

மச்சி நல்ல எழுதி இருக்கிற டா.
படம் நான் ரொம்ப பீல் பண்ணிட்டேன்.
இடைவேளையும்,முடியும் ரொம்ப புடிச்சிருந்தது.

பிரதாப் said...

மச்சி நல்ல எழுதி இருக்கிற டா.
படம் நான் ரொம்ப பீல் பண்ணிட்டேன்.
இடைவேளையும்,முடியும் ரொம்ப புடிச்சிருந்தது.

ஸ்வீட் ராஸ்கல் said...

@ விஷ்ணு,
மிக்க நன்றி மச்சி உன் கருத்தை பகிர்ந்தமைக்கு.நீ தான் முதல் கமெண்ட் போடுவன்னு நான் நினச்சேன்.

ஸ்வீட் ராஸ்கல் said...

@ இந்திரா
மிக்க நன்றி இந்திரா அக்கா,நீங்கள் தொடர்ந்து ஆதரவு தந்து,கருத்தையும் பகிர்ந்து வருவதற்கு.தொடர்ந்து வாருங்கள்.நல்லா இருக்கு இல்ல அக்கா இந்த வலைதள அலங்காரம்.நானும் ஆச்சர்ய பட்டேன் நீங்கள் கொடுத்த அந்த லிங்கை போட்டு பார்த்து.

ஸ்வீட் ராஸ்கல் said...

@கவிதை காதலன்,
மிக்க நன்றி மச்சி.உன் கமெண்டை நான் மிகவும் எதிர் பார்த்துட்டு இருந்தேன்.உன்னோட கமெண்டே ஒரு விமர்சனம் மாதிரி இருக்கு மச்சி.சீக்கிரம் கவிதை எழுதுங்கள் கவிதை காதலனே.ரொம்ப நாள் ஆய்டுச்சி நீங்கள் ப்ளாக் எழுதி.காத்துக் கொண்டிருக்கிறோம் உங்கள் கவிதைகளுக்கு.

ஸ்வீட் ராஸ்கல் said...

@ பிரதாப்,
மிக்க நன்றி மச்சி.நீ படத்த ரசிச்சத நான் பக்கத்துல இருந்து பார்தேனே.இடைவேளையும்,முடிவும் நிச்சயம் எல்லாரையும் பாதிக்கும்.

shobijai said...

superb film...love the most......romba nalla kalithu oru nalla padam patha oru feel kadachathu.....each and every human being should c the film....awesome.....as i personally love the film because i love jai:)

ஸ்வீட் ராஸ்கல் said...

@ Shobi
Thanks a lot shobi,s ur correct.Actually every human should c the film.Thanks a lot for ur comments.